கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு

Sep 11, 2019 12:06 PM 104

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 67ஆயிரத்து 931 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் ஒகேனக்கலில் வெள்ளப் பெருக்கு நீடிப்பதால், 35வது நாளாக அருவியில்
குளிக்கவும், 7வது நாளாக பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted