கார்த்தியின் ‘தம்பி’ படம் குறித்த புதிய அப்டேட்..!

Nov 29, 2019 11:50 AM 1160

கார்த்தி தனது அண்ணியுடன் இணைந்து நடித்திருக்கும் ‘தம்பி’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை அடுத்து பாபநாசம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள “ தம்பி ”படத்தில் கார்த்தி , ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு போட்டியாக கிறிஸ்துமஸ்- க்கு வெளியாகிறது.

Comment

Successfully posted