கருணாநிதி தற்போது நலமுடன் உள்ளார் - மு.க.ஸ்டாலின்

Aug 02, 2018 11:47 AM 1008

உடல்நலக்குறைவால் கடந்த 27ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். 6வது நாளாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர், தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில், மருத்துவமனையில் இருந்து நள்ளிரவு புறப்படும் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது கருணாநிதி நலமுடன் இருப்பதாக கூறினார். தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வீடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted