ஒரு கோடி ரூபாய் பணத்திற்காக தொழிலதிபர் கடத்தி கொலை

Dec 08, 2021 04:02 PM 3595

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கல்குவாரி பயன்படுத்தப்படும் டிப்பர் லாரிஒன்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தது. அதனை தலைவாசல் போலீஸார்சென்று பார்த்தபோது அதில் இருந்த நபர்கள் ஓட்டம் பிடித்தனர்.

லாரியின் உள்ளே பார்த்தபோது கரூர் தென்னிலை பகுதியில் சரவணா கல்குவாரி நடத்தி வருபவர் சாமிநாதன் (வயது 65) அவர் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

உடனடியாக அந்த லாரியில் இருந்து ஓடிய நபர்களை தலைவாசல் போலீசார்துரத்திச் சென்றனர் அப்பொழுது திருப்பூர் ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் (வயது21), விஜய் ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்தனர்.

மேலும் இவரிடம் விசாரணை நடத்தியதில் இவரை நேற்று கரூர் பகுதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தி வந்தது தெரியவந்தது மேலும் இவருடன் இருந்த நபர்கள் யார் என்பது குறித்து தலைவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் தென்னிலை காவல் நிலையத்தில் நேற்று இவர் காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் அந்த போலீசாரும் தலை வாசலுக்கு வந்து இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் கொல்லப்பட்ட சம்பவம் தலைவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted