காஷ்மீர் ,சோபூரில் நடந்த சண்டையில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம்

Sep 11, 2019 12:40 PM 48

காஷ்மீர் மாநிலம் சோபூரில் நடந்த சண்டையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஆசிப் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சண்டையில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.

பாராமுல்லா மாவட்டம் சோபூரில் அண்மையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஆசிப் என்ற தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். இதேபோன்று, அஸமா ஜான் என்ற இளம் பெண் மீது ஆசிப் தாக்குதல் நடத்தி இருந்தார். இந்தநிலையில், சோபூர் பகுதியில் பதுங்கி இருந்த ஆசிப்பை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் ஆசிப் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தச் சண்டையில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.

Comment

Successfully posted