காஷ்மீர் உருக்குலைந்ததற்கு மத்திய பாஜக அரசே காரணம் -ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Oct 30, 2018 09:37 AM 473

காஷ்மீர் மாநிலம் உருக்குலைந்ததற்கு மத்திய பாஜக அரசே காரணம் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டிய அவர், காஷ்மீர் மாநிலம் உருக்குலைந்ததால் பயங்கரவாதிகள் எளிதில் ஊடுருவுகிறார்கள் என்றும், இதற்கு பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இரண்டே வாரங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

Comment

Successfully posted