சூறாவளி காற்றில் சேதமடைந்த கதலி ரக வாழை மரங்கள்

Feb 23, 2019 11:00 AM 363

அந்தியூர் அருகே வீசிய சூறாவளிக் காற்றால், அறுவடைக்கு தயாராக இருந்த ஏராளமான வாழை மரங்கள் கீழே சாய்ந்து, சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள கொமராயனூர் பிரிவு பகுதியில் நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றினால் அப்பகுதியில் சாகுபடி செய்திருந்த ஏராளமான கதலி ரக வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அறுவடைக்கு இன்னும் 20 நாட்கள் இருந்த நிலையில் வாழை மரங்கள் சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted