மேக்கப் இல்லாமல் நடிக்க உள்ளாரா கீர்த்தி சுரேஷ் ?

Oct 19, 2019 12:56 PM 927

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்கார் படம் கடந்த ஆண்டு வெளியானது.அதன் பின் தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை.அக்டோபர் 17ம் தேதி இவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை ஒட்டி இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட்க்கள் வெளியாகின.

நாகேஷ் கூகுனூர் இயக்கத்தில் விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் தோற்றமளிக்கிறார்.மேலும் இந்த படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் பெண்குயின் திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் தெலுங்கில் மிஸ் இந்தியா திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்துக்கொண்டிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related items

Comment

Successfully posted