அரசு பள்ளியில் படித்தவர்களும் பெரிய பதவிக்கு வர முடியும்: கேரள ஆளுநர்

Aug 25, 2019 09:33 PM 53

வகுப்பறையில் கல்வியுடன் மற்ற திறன்களையும் மாணவ, மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என கேரள ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள வேளாளர் கல்வி நிறுவனங்களின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் சதாசிவம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மாணவிகள் மத்தியில் உரையாடிய கேரள ஆளுநர், சாதாரண கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளிகளில் படித்தவர்களும் முயற்சித்தால் பெரிய பதவிகளுக்கு வர முடியும் என்பதற்குத் தானே ஒரு உதாரணம் எனக் கூறினார்.

நல்ல பயிற்சியும், முயற்சியும் இருந்தால் பெண்களும் தொழில் துறையில் சாதிக்க முடியும் என அவர் மாணவிகளுக்கு ஊக்கமளித்தார்.

Comment

Successfully posted