கேரளாவில் நவம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு

Sep 19, 2021 09:46 PM 773

கேரளாவில், கொரோனா பரவலால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகள், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஒன்று முதல் 7 மற்றும் பத்து முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

இதே போன்று, 8ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தாமதமாக திறப்பது ஏன் என்ற குழப்பம் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது.

 இதனிடையே, கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

Comment

Successfully posted