மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம்

May 19, 2021 02:27 PM 1516

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று போற்றப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

வயது மூப்பு காரணமாக, எழுத்தாளர் கி.ரா, புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டு, அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கி.ராவின் உடல் வீட்டில் இருந்து அரசு மரியாதையுடன் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு, காவல்துறையினரின் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தமிழக அரசின் முழு மரியாதையுடன் கி.ரா.வின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சமகால எழுத்தாளர் ஒருவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது இதுவே முதல்முறை. 

Comment

Successfully posted