நகைக்காக பெண் கொலை

Oct 16, 2018 11:37 PM 357

கடலூர் அருகே 5 பவுன் நகைக்காக பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குண்டு உப்பலவாடி பகுதியை சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி சங்கீதா. இவர் தனது வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர். இதனை எதிர்த்து சங்கீதா போராடியதால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனர்.

இதனிடையே உயிருக்கு போராடிய சங்கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை வரவழைத்து துப்பு துலக்க முயன்றனர்.நேரில்  விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்கணிப்பாளர் சரவணன், கொள்ளையர்களை விரைவில் பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted