கொடநாடு கொலை வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட இருவர் கைது

Feb 11, 2019 06:38 AM 54

கொடநாடு கொலை வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத சயான், மனோஜ், பிஜின்குட்டி மற்றும் தீபு ஆகியோருக்கு உதகை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. நான்கு பேரையும் தேடிவந்த நீலகரி தனிப்படை காவலர்கள், பிஜின்குட்டி மற்றும் தீபுவை கேரளாவில் வைத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted