ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவை வாலிபர் கைது

Jun 13, 2019 07:15 AM 188

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கோவையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை பல்வேறு ஆய்வுகளை நடத்தியது. அதில் கோவையைச் சுற்றி வசிக்கும் முகமது அசாரூதின், அக்ரம் சிந்தா, ஷேக் ஹிதயதுல்லா, அபுபக்கர், சதாம் ஹூசைன், இப்ராஹீம் உள்ளிட்ட 6 பேரும், சமூக வலைத்தளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளை பரப்பியது தெரியவந்துள்ளது. இதன்மூலம், இளைஞர்களை மூளைச் சலவை செய்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடத்தூண்டியது தெரியவந்தது.

இதையடுத்து, மர்மநபர்கள் 6 பேரின் இல்லங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில், 14 செல்போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணினிகள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட் டிஸ்குகள், 1 இணைய டாங்கிள், 13 சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் முகமது அசாருதீனை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Comment

Successfully posted