கிருஷ்ணகிரி சந்திரசூடேஸ்வரர் கோயிலில் மாசி மாத விழா

Mar 15, 2019 09:24 PM 67

ஓசூரில் உள்ள மலைக்கோயிலில், மாசி மாத திருவிழாவை முன்னிட்டு, சிம்ம வாகனத்தில் சந்திரசூடேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மலைக்கோயிலில் அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் மாசி மாத திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வரும் 20 ஆம் தேதி அன்று தேர்திருவிழா நடைபெற உள்ளது. ஏழு நாட்களில் ஏழுவிதமான வாகனங்களில், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் அருள் பாலிப்பார். இந்தநிலையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசூடேஸ்வரர், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted