கள்ளக்தொடர்பு விவகாரத்தில் கிருஷ்ணகிரி பைனான்ஸ் அதிபர் கடத்தி கொலை

Jul 12, 2019 11:13 AM 91

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பைனான்ஸ் தொழில் அதிபரை கடத்தி கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அருகே சின்னமுத்தூரை சேர்ந்த பைனான்ஸ் தொழில் அதிபர் லட்சுமணன், இவருக்கும் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நகுலன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கும் பணம் கொடுத்தல் வாங்கல் இருந்துவந்துள்ளது.

இதற்கிடையே ரங்கநாதனின் கள்ளக்காதலிக்கும் பைனான்சியர் லட்சுமணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை எப்படியோ கண்டுபிடித்த ரங்கநாதன் லட்சுமணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன் படியே கடந்த 30 ஆம் தேதி யாரும் இல்லாத இடத்தில் லட்சுமணன் நடந்து வரும் பொழுது தலையில் கம்பியால் அடித்து... அவரை காரில் கடத்தி கொலைசெய்து முக்குளம் ஏரியில் புதைத்திருக்கிறார் ரங்கநாதன்...

தனது தந்தையை காணவில்லை என்று பைனான்சியரின் மகன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே தீவிரமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தான்தான் லட்சுமணனை கொன்றேன் என்று கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனிடன் சரணடைந்தார் ரங்கநாதன்.

மேலும் ரங்கநாதன் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதை தொடர்ந்து ரங்கநாதன் மீது காரிமங்கலம் காவல்துறையினர், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related items

Comment

Successfully posted