குமரியில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

Aug 16, 2018 12:56 PM 447
கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை, மங்காடு, வாவரை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளை இழந்து தவித்து வரும்  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே தேங்காய்பட்டினம் அருகே  படகை மீட்க சென்ற மீனவர்கள் இரண்டு  பேர்  மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Comment

Successfully posted