வறண்ட நிலையில் காட்சியளிக்கும் குண்டாறு அணை

Mar 14, 2019 01:36 PM 84

கோடை தொடங்குவதற்கு முன்பே வாட்டியெடுக்கும் வெயில் காரணமாக, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ள குண்டாறு அணை வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. இந்த அணையின் மூலம் கண்ணுப்புளிமெட்டு, இரட்டைகுளம், வல்லம், புதூர், செங்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்து 122 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுமட்டும் இன்றி, பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் இந்த அணை முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில், கடும் வெயில் காரணமாக குண்டாறு அணை வரண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Comment

Successfully posted