வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க குவைத் அரசு புதிய சட்டம்!!

Jul 06, 2020 10:54 AM 2191

குவைத் அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தால் அங்கு வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கொரோனா கால ஊரடங்கால் மற்ற நாடுகளை போன்றே வளைகுடா நாடுகளும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதில் இருந்து மீள சொந்த நாட்டினருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய குவைத் அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 43 லட்சம் பேரை கொண்ட குவைத் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் வெளிநாட்டினர் ஆவர். புதிய சட்டத்தின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 15 சதவீதம் அளவிற்கான இந்தியர்கள் மட்டுமே இனி அங்கு வசிக்க முடியும். இதனால் அங்கு வசிக்கும் 15 லட்சம் இந்தியர்களில் சுமார் 8 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Comment

Successfully posted