`எஸ்.பி.பி.யைப்போல யாராலும் இருக்கமுடியாது’ - எல்.ஆர்.ஈஸ்வரி புகழாரம்!

Sep 26, 2020 10:05 AM 455

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவருடனான நினைவுகளை பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், ``மறக்கமுடியாத மனிதர் எஸ்.பி.பி. அவர் மறையவில்லை. நம்மோடு வாழ்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

அவர் ஒரு குழந்தைமாதிரி. பன்மையான மனிதர். மனிதநேயமிக்கவர். மனிதனாய் இரு என்பதற்கு எடுத்துக்காட்டு எஸ்.பி.பி. அவரைப்போல யாராலும் வாழ முடியாது. மரகத கல்லு மாதிரி. அவருடைய பிறப்பு, இறப்பு அழிக்க முடியாதது. அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

எத்தனை தலைமுறைகள் வந்தாலும், அவர் புகழ் மறையாது. பெயர் நிலைத்து நிற்கும் வகையில் சாதனை படைத்தவர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மரியாதை செலுத்துபவர். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் ஒரு அஷ்டாவதானி.

அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் அவருடைய குடும்பத்தினருக்கு மனபலத்தை கொடுக்கவேண்டும் என இறைவனைக் கேட்டுகொள்கிறேன். பல தலைமுறைகளுக்கு அவரது பாடல் நீடித்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted