மக்களவையில் காங். உறுப்பினர்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து

Mar 11, 2020 04:09 PM 690

 

மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக அண்மையில் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், சபாநாயகர் மீது காகிதங்களை வீசியெறிந்தனர். இதையடுத்து ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி, காங்கிரஸ் உறுப்பினர்கள் கவுரவ் கோகோய், பிரதாபன், டீன் குரியகோஸ், மாணிக்கம் தாகூர், ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட 7 பேரை அவை முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், 7 உறுப்பினர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

Comment

Successfully posted