'ரவுடி பேபி' பாடல் மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்தது

Aug 13, 2019 02:41 PM 561

நடிகர் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சமி சரத்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாரி-2. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் பாலாஜி மோகன் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தில், அமைந்துள்ள "ரவுடி பேபி" என்ற பாடல், படம் திரைக்கு வருவதற்கு முன்பே, பலரும் விரும்பி கேட்க தொடங்கியதை அடுத்து தனுஷ், சாய் பல்லவி ஜோடியை திரையரங்குகளில் காண பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்தது. பின்னர், படம் வெளியாகி, ரவுடி பேபி பாடல் எல்லோரது மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளமான யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் பார்த்து ரசித்தது மற்றும் அதிக லைக்குகள் பெற்று பல சாதனைகள் படைத்தது. இந்நிலையில், தற்போது வரை 600 மில்லியன் பேர் இந்தப் பாடலை யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த ரவுடி பேபி பாடல், தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை கடந்து "ரவுடி பேபி" பாடல் சாதனை படைத்துள்ளது.

Comment

Successfully posted