உணவு மற்றும் தங்கும் இடமின்றி திருப்பூர் ரயில் நிலையத்தில் 2 நாட்களாக காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்

May 11, 2021 05:26 PM 281

ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் 2 நாட்களாக காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள், உணவு மற்றும் தங்கும் இடமின்றி தவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஊரடங்கு காலத்திலும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அதே சமயம், கொரோனா பரவல் அச்சம் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

12ம் தேதி செல்ல உள்ள ரயிலுக்கு முன்பதிவு செய்தவர்கள், ஊரடங்கில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயங்காது என்பதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவே திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து காத்திருக்கின்றனர்.

இவர்கள் தங்குவதற்கு போதிய வசதி இல்லாததால், ரயில் நிலையம் முன்பாகவே படுத்து உறங்கி, கிடைக்கும் பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இதனால் கையில் வைத்திருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதாகவும், தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comment

Successfully posted