ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இன்று முதல் லட்டு இலவசம்

Jan 20, 2020 11:54 AM 865


ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும் இன்று முதல் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக லட்டு உற்பத்தியை 3 லட்சத்தில் இருந்து தினமும் 4 லட்சம் லட்டுகள் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கும் நடை முறையை தேவஸ்தானம் இன்று முதல் நிறுத்த உள்ளது. கூடுதல் லட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் லட்டு ஒன்றிற்கு 50 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Comment

Successfully posted