கன்னக்குழி சிரிப்பழகி லைலாவின் பிறந்த நாள் இன்று!

Oct 24, 2018 11:30 AM 647

தன்னுடைய கன்னக்குழி சிரிப்பால், தமிழ் திரை ரசிகர்களை தன் வசம் இழுத்த நடிகை லைலாவின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய ஒரு சிறிய செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

வெள்ளித்திரையில் தோன்றும் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அதன் மூலமே அவர்கள் ரசிகர்களை கவர்வார்கள். அந்த வகையில், தன்னுடைய அழகான கன்னக்குழி சிரிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் லைலா.

1996 ல், பாலிவுட்டில், துஷ்மன் துனியா கா என்ற படத்தில் அறிமுகமான லைலா, அதன்பின், தெலுங்கு, உருது, மலையாளம் என பல மொழிகளில் நடித்து, 1999 ம் ஆண்டு கள்ளழகர் படம் மூலம், கோலிவுட்டிற்கு வந்தார். தொடர்ந்து, முதல்வன், ரோஜாவனம் படங்களில் நடித்த அவருக்கு, பார்த்தேன் ரசித்தேன், அஜித்துடன் அவர் நடித்த தீனா, விக்ரமுடன் நடித்த தில் படங்கள், ஸ்டார் அந்தஸ்த்தை கொடுத்தன.

பின்னர், இயக்குனர் பாலாவின் பார்வை அவர் மீது பட்டதால், நந்தா, பிதாமகன் படங்களில் லைலாவை நடிக்க வைத்து, ரசிகர்கள் சிரிப்புப் பதுமையாகவே பார்த்த அவரின் நடிப்புத்திறமையை ரசிகர்கள் உணரச் செய்தார். இந்த படங்களுக்காக, பிலிம்ஃபேர் விருதுகளையும் தட்டிச் சென்றார் லைலா.

பிதாமகன் படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருதையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து, தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடித்த அவர், 2006 ம் ஆண்டு, திருமணம் செய்துகொண்டு, வெள்ளித்திரை பயணத்தை முடித்துக் கொண்டார். இருந்தாலும், அவரின் க்யூட்டான சிரிப்பை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.

Comment

Successfully posted