லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்

Oct 10, 2019 01:30 PM 128

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

அக்டோபர் 1ம் தேதி திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி கடையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், திருவாரூர் அருகே வாகன சோதனையில் மணிகண்டன் என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்த சில நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுரேஷ் என்பவர் தப்பியோடினார். காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். நகைக்கடை கொள்ளை வழக்கில் சுரேஷ் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted