நிலஅபகரிப்பு வழக்கு: திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 20, 2020 07:06 AM 508

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய மனு குறித்து மா.சுப்பிரமணியன் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிட்கோவின் நிலத்தை, சைதாபேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன், சென்னை மேயராக இருந்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்ததாக  சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்ரமணியன் மீது சிபிசிஐடி காவல்துறையினர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினராக உள்ள மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கை, எம்.பி - எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற கோரி மனுதாரர்  பார்த்திபன் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு குறித்து மா.சுப்ரமணியன், அவரது மனைவி காஞ்சனா உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

Comment

Successfully posted