உதகை-மஞ்சூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு : சீரமைப்பு பணிக்காக போக்குவரத்து மாற்றம்

Nov 17, 2019 10:23 AM 138

நீலகிரி மாவட்டம் உதகை-மஞ்சூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து, அங்கு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்காலிகமாக 20 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் உதகை - மஞ்சூர் சாலையில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் பழுதடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணி மாநில நெடுஞ்சாலை துறையினர் மூலம் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் மண்சரிவு ஏற்பட்ட சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அப்பகுதியை அகலபடுத்த தடுப்பு சுவர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் இப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்ல இருபது நாட்களுக்குள் அனுமதியில்லையென நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. எனவே வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted