கடந்த பட்ஜெட்: சொன்னதைச் செய்த அதிமுக அரசு

Feb 14, 2020 07:00 AM 549

தமிழக அரசின் கடந்த நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பெரும்பாலான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழக அரசு சொன்னபடி நிறைவேற்றிக் காட்டிய சில முக்கியத் திட்டங்கள் இதோ...


அத்திக்கடவு அவினாசி திட்டம்:
==================
 
அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும், அதற்காக 1000 கோடிரூபாய் ஒதுக்கப்படுகின்றது என்று கடந்த பட்ஜெட்டில் கூறப்பட்டது. 60 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திந்தத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியே இந்தத் திட்டத்திற்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
 
மின்சாரப் பேருந்துகள்:
==============
 
தமிழகத்தில் மாசற்ற மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. இதன்படி சென்னையின் முதல் மின்சாரப் பேருந்தின் சோதனை இயக்கம் கடந்த 2019 ஆகஸ்டு 26ஆம் தேதியன்று தமிழக முதல்வரால்
கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
 
வாகன நிறுத்தம்:
=============
 
சென்னையில் 2000 கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் - என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னை முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு, 101
இடங்கள் கண்டறியப்பட்டன. அங்கெல்லாம் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
மீன்பிடித் துறைமுகங்கள்:
===================
 தமிழகத்தில் புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் - என்று கடந்த பட்ஜெட்டில் கூறப்பட்ட நிலையில், சென்னை திருவொற்றியூரில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆறுகாட்டுத்துறை,
வெள்ளப்பள்ளம், நம்பியார்நகர், நாகூர் பட்டினச்சேரி, தரங்கம்பாடி ஆகிய 5 இடங்களில் ரூ.424 கோடி மதிப்பீட்டில் சிறுமீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லும் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நாட்டப்பட்டது.
 
தமிழ்நாடு  சுகாதார சீரமைப்புத் திட்டம்:
==========================
 
அரசு மருத்துவமனைகள்  மூலம் கிடைக்கும் மருத்துவ வசதிகள் ஏழை எளிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு எளிதில் கிடைக்கப் பெறுவதை  உறுதி செய்வதற்காக, உலக வங்கி கடனுதவியுடன் 2,685.91 கோடி  ரூபாய் செலவில் ‘தமிழ்நாடு சுகாதார
சீரமைப்புத் திட்டம்’ விரைவில் செயல்படுத்தப்படும் - என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2019 ஜூன் மாதம் 8ஆம் தேதி, உலக வங்கியுடன் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
 
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம்:
========================
 சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக பங்கு  மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் 2,681 கோடி ரூபாய் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான மண்பரிசோதனைகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில்
மேற்கொள்ளப்பட்ட நிலையில், விரைவில் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.
 
மரபு காளைகளைப் பெருக்க உறைவிந்து நிலையம்:
================================
 
மரபுத்திறன் மிக்க காளைகள் மற்றும் கலப்பினக் காளைகளுக்காக உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் - என கடந்த பட்ஜெட்டில் கூறப்பட்டது. சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட சேலம் கால்நடைப் பூங்காவில் இந்தத் திட்டத்திற்கும் இடம்
அளிக்கப்பட்டு உள்ளது.

Comment

Successfully posted