பாஜகவில் இணைந்த சிக்கிம் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்

Aug 13, 2019 03:37 PM 129

சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணியின் பவன் குமார் சாம்லிங் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணைந்தனர். சிக்கிமில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு 15 சட்டமன்ற உறுப்பினர்களும், சிக்கிம் கிராந்தகிரி மோட்சாவிற்கு 17 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். 32 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சிக்கிம் சட்டப்பேரவையில் இதுவரை சிக்கிம் கிராந்தகிரி மோட்சா ஆட்சியமைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

Comment

Successfully posted