இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 22 எம்.எல்.ஏக்கள் பதவியேற்பது எப்போது?: சட்டப்பேரவை செயலகம் விளக்கம்

May 24, 2019 09:56 PM 340

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 22 எம்.எல்.ஏக்கள் எப்போது பதவியேற்பார்கள் என சட்டப்பேரவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் ஏப்ரல் 18ம் தேதியும் 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதியும் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் விரைவில் பதவியேற்கவுள்ளனர். இதற்கான சட்டப்பேரவை நடைமுறைப்படி, வெற்றி பெற்ற 22 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெயர்கள் முதலில் அரசிதழில் வெளியிடப்படும். பின்னர் உறுப்பினர்கள் பதவியேற்பதற்கான நேரம் குறித்து சபாநாயகரிடம் கேட்பார்கள். இதன் பின்பு சபாநயாகர், பதவியேற்பு நாள் மற்றும் நேரம் குறித்து தனது முடிவினை தெரிவிப்பார். இதையடுத்து புதிய உறுப்பினர்கள் சபாநாயகர் அறையில் பதவியேற்பார்கள்.

Comment

Successfully posted