வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலத்தில் குளிக்க தடை நீக்கம்

Nov 01, 2019 01:51 PM 110

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்ததால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க, கடந்த 4 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted