அமைச்சர் சி.வி.சண்முகத்தை வெற்றி பெறச் செய்வோம்!- அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டம்!

Apr 02, 2021 10:09 PM 1156

தமிழக அரசின் எண்ணற்ற திட்டங்கள் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை, ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் உறுதி ஏற்றுக்கொண்டனர்.

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக நகர செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அதிமுக அரசின் எண்ணற்ற திட்டங்கள் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் என்றும் அவரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய அதிமுக அரசு மீண்டும் அமைந்திட, வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Comment

Successfully posted