குப்பை மற்றும் கழிவு சேகரிப்பு பணிக்கு இலகு ரக வாகனம்

Jun 30, 2019 07:20 AM 206

ராமநாதபுரத்தில் குப்பை சேகரிப்பு பணிகளுக்காக இலகு ரக மற்றும் மின்கல இயக்க வாகனங்களை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.


ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பை மற்றும் கழிவு சேகரிப்பு பணிகளுக்காக, இலகு ரக மற்றும் மின்கல இயக்க வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த வாகனங்களின் செயல்பாட்டினை, தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார். இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையாளர் உட்பட நகராட்சி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted