பிக்பாஸ் பிரபலங்களை சந்தித்த லிட்டில் சூப்பர் ஸ்டார்...!

Oct 08, 2019 06:55 PM 609

கடந்த 100 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த “பிக்பாஸ்” நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முகென் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இரண்டாம் இடம் பிடித்தார். வெற்றிப்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் சில நாட்களுக்கு முன் வெளியேறினாலும் அவருக்கு தனது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாண்டி மற்றும் தர்ஷனை தனது இல்லத்தில் நடிகர் சிம்பு சந்தித்து அவர்களுக்கு பரிசு வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது நடிகரும், சிம்புவின் நண்பருமான மகத்தும் உடன் இருந்தார். தாய்லாந்தில் இருந்து சமீபத்தில் சென்னை திரும்பிய சிம்பு மீண்டும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.

Comment

Successfully posted