பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Nov 29, 2019 12:33 PM 386

வேதாரண்யம் கடற்கரைக் கிராமங்களில் பலத்த காற்று வீசுவதாலும், கடல் சீற்றம் காரணமாகவும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

நாகை மாவட்டம் புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், 5,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கடலில் சூறைக்காற்று வீசுவதாலும், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து, கடல் சீற்றம் காரணமாக பைபர் படைகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர். மேலும், கடலுக்கு செல்லாததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted