அதிமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்க திமுக எம்.எல்.ஏ. அழுத்தம்...

Sep 24, 2021 01:01 PM 1398

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் திமுக எம்எல்ஏ தலையீட்டால், வேட்பாளர் மனுவை நிராகரிக்க முயன்றதை அறிந்த அதிமுகவினர் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட குட்டகந்தூர் பகுதியை சேர்ந்த மகாதேவன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

திமுகவின் தோல்வி பயத்தால் ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதன் தலையிட்டு மகாதேவனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அதிமுகவினர் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு, அனைத்து ஆவணங்களும் சரியாக சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும்போது, அதிமுக வேட்பாளரை எப்படி நிராகரிக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், தேர்தல் அலுவலர் மனுவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.

1-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் அதிமுக வேட்பாளர் மகாதேவன் பெயரை இறுதி செய்து, அறிவிப்பு பலகையில் மகாதேவன் பெயரை ஒட்டிய பின்னரே அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comment

Successfully posted