"தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பச்சைபொய் பேசுகிறார்"

Sep 27, 2021 01:39 PM 2648

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தமிழக மக்களை ஏமாற்றிய திமுகவிற்கு, உள்ளாட்சித் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இணை ஒருங்கிணைப்பாளருக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ஆட்சி பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே மக்களிடம் திமுக அதிருப்தியை பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறும் ஸ்டாலின், அதனை நிரூபிக்க தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், பச்சை பொய் பேசி வரும் ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

 

உள்ளாட்சித் தேர்தலில் திமுக முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டிய சி.வி.சண்முகம், அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர்கள் விழிப்புடன் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என குறிப்பிட்டார்.

Comment

Successfully posted