உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக சார்பில் விநியோகிக்கப்படும் விருப்ப மனுக்களின் கட்டண விவரம்

Nov 15, 2019 02:52 PM 206

உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விநியோகிக்கப்படும் விருப்ப மனுக்களின் கட்டண விவரங்களை பற்றிய தொகுப்பு ...

மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தி அதற்கான விண்ணப்பத்தை பெறலாம். நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 10 ஆயிரம் ரூபாயும், நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 2 ஆயிரத்து 500 ரூபாயும் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் ஆயிரத்து 500 ரூபாயும் செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 3 ஆயிரம் ரூபாயும் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம்.

 

Comment

Successfully posted

Super User

super