உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

Dec 14, 2019 07:45 PM 500

அரியலூர் உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மாவட்ட ஊராட்சி 10வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அன்பழகன் மற்றும் 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சந்திரசேகர் ஆகியோர், அரியலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக, அதிமுக வேட்பாளர்களான அன்பழகன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட கழக செயலாளருமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் 2 ஆயிரம் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வேட்பு மனுத்தாக்கலின்போது பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Comment

Successfully posted