உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி

Nov 17, 2019 06:59 AM 110

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் போனதற்கு, திமுக வழக்கு தொடர்ந்ததே காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், மாவட்டங்களை பிரிப்பது என்பது மக்களின் நெடுநாளைய கோரிக்கை என்பதை திமுக உணர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Comment

Successfully posted