அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு - முதலமைச்சர் அறிவிப்பு

Sep 29, 2020 06:54 PM 580

 

தமிழகத்தில் தொடரும் தடை!

அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு

பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டுக்கான தடை தொடரும்

புறநகர் மின்ரயில் போக்குவரத்துக்கும் தடை தொடரும்.

மதம்சார்ந்த கூட்டங்கள், விழாக்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு.

திரையரங்கு, நீச்சல்குளம், சுற்றுலாத்தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை, போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீட்டிப்பு.

மத்திய அரசால் அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் சர்வதேச விமானப்போக்குவரத்துக்கான தடை தொடரும்.


____

எவற்றிற்கெல்லாம் அனுமதி?

உணவகங்கள், தேநீர்க் கடை காலை 6 மணி முதல் இரவு 9 வரை இயங்கலாம்; 10மணி வரை பார்சல் சேவை.

படப்பிடிப்பில் 100 பேர் வரை வேலை செய்யலாம்; பார்வையாளர் அனுமதியில்லை.

சென்னை விமானநிலையத்தில் வெளிமாநிலங்களிலிருந்து 100 விமானங்கள் வரை தரையிறங்கலாம்.

அரசு சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படலாம்.

ஊரக, நகர வாரச்சந்தைகள் மட்டும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படலாம்.

10-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்தி வைப்பு.

 

 

 

Comment

Successfully posted