மக்களவை தேர்தல்: அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தெலுங்கர் சிறுபான்மையினர் ஆதரவு

Mar 14, 2019 05:11 PM 140

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டினை வரவேற்பதாக கூறினார். இதனை நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் ஏற்றுக் கொண்ட நிலையில், தமிழகத்தில் திமுக மட்டும் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

எனவே, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவரும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அரவிந்தன் கூறினார்.

Comment

Successfully posted