மக்களவை தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது

May 16, 2019 06:40 AM 147

மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11 முதல் மே மாதம் 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இறுதிகட்ட தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 56 தொகுதிகளுக்கு 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வடைகிறது.

Comment

Successfully posted