மக்களவை தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவு

May 16, 2019 07:09 PM 56

மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் மற்றும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11 முதல் மே மாதம் 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இறுதிகட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 56 தொகுதிகளுக்கு 19 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் 19 ம்தேதி அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வடைகிறது. 

Comment

Successfully posted