மக்களவை தேர்தல் : அதிமுக விருப்ப மனு பெறும் கால அவகாசம் நீட்டிப்பு

Feb 10, 2019 05:13 PM 159

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு பெறும் கால அவகாசத்தை அதிமுக தலைமை கழகம் நீட்டித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், மக்களவை தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்கள், தங்கள் விருப்ப மனுக்களை தலைமை கழகத்தில் வழங்கி வருகின்றனர். விருப்ப மனுக்களை பெறும் கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்கும்படி கழக நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

கழக நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, விருப்ப மனுக்களை பெற கால அவகாசத்தை அதிமுக தலைமை கழகம் நீட்டித்துள்ளது. வரும் 14 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி வரை தங்களது விருப்ப மனுக்களை வழங்கலாம் என்றும் அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted