லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது தாக்குதல்

Nov 30, 2019 12:19 PM 387

லண்டனில், சரமாரியாக கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

இங்கிலாந்தில் புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தினார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் இருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மர்மநபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதனை தீவிரவாத தாக்குதலாக குறிப்பிட்டுள்ள காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்டவர் 28 வயதான உஸ்மன் கான் என தெரிவித்தனர். இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted