மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது: தமிழக அரசுக்கு நன்றி

Jan 11, 2019 06:48 AM 78

தர்மபுரி மற்றும் கிருஷ்னகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உபரி நீரை பயன்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கிருஷ்னகிரி அணையின் வலது புறகால்வாயை நீட்டிப்பு செய்து உபரி நீரை அப்பகுதி ஏரிகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. அதேபோல், அலியாளம் அணைக் கட்டிலிருந்து வலது புறகால்வாய் அமைத்து தூள் செட்டி, கடகத்தூர், சோகத்தூர், ராமக்கல், கிருஷ்ணாபுரம் ஏரிகளுக்கு நீர் வழங்குவதற்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்னை ஆற்றின் உபரி நீரை, கால்வாய் அமைத்து தும்பல அள்ளி நீர் தேக்கத்திற்கு வழங்கி அதன் மூலம் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார். தமிழக அரசின் நடவடிக்கைக்கு மகிழ்ச்சி தெரிவித்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Comment

Successfully posted