நல்ல காதலை தேடுகிறாரா ஸ்ருதிஹாசன்..?

Oct 09, 2019 04:42 PM 332

3 திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த ஸ்ருதிஹாசன் தனது காதல் வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு வாரிசு முறையில் வந்தாலும் தனது நடிப்பு மட்டுமின்றி இசை என பல துறையிலும் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்த இளம் நடிகையாக ஸ்ருதிஹாசன் திகழ்கிறார். அதிலும் குறிப்பாக கடந்த 2012 ஆண்டு வெளியான 3 திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ருதிஹாசன்.

ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம் காதலை பற்றி கேள்வி எழுந்தது , அதற்கு மனிதர்கள் சில நேரங்களில் தன்மையானவராகவும் சில சமயத்தில் மோசமானவர்களாகவும் இருக்கின்றனர் என பழைய காதல் தோல்வி குறித்து விளக்கம் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து நல்ல காதலுக்காக ஸ்ருதிஹாசன் ஏங்குவதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் அவர் பதிலளித்தார். மேலும் , எஸ். பி. ஜனநாதன் இயக்கத்தில் வெளியாக உள்ள லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

 

 

Comment

Successfully posted