சென்னையில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி கொள்ளை

Jul 20, 2019 06:08 PM 109

சென்னையில் வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்து வந்த வெளிநாட்டை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பழைய மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்ல் ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் விசாரணையை துவக்கிய காவல்துறையினருக்கு நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பல்கேரியா நாட்டை சேர்ந்த நெக்கோலேய், போரீஸ், லுயுபேமீர் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள், 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் டாலர் வெளிநாட்டு பணம் மற்றும் ஸ்கிம்மர் கருவி, லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted